Students Corner

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ( IIT - Chennai )

சென்னை ஐ.ஐ.டி., 1959ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மொத்தம் 250 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.,யில் 460 பேராசிரியர்களும்,  4 ஆயிரத்து 500 மாணவர்களும், ஆயிரத்து 250 நிர்வாக ஊழியர்களும் உள்ளனர். கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோசனை என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

அறிவியல், பொறியியல் சம்பந்தப்பட்ட15 துறைகள், சில ஆராய்ச்சி மையங்கள், 100 ஆய்வக்கூடங்கள் ஆகியவற்றுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரமிக்க ஆசிரியர்கள், புத்திகூர்மையான மாணவர்கள், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள், சிறந்த நிர்வாகம் என சென்னை ஐ.ஐ.டி.,  சர்வதேச புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகிறது.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,):
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் பிசிக்ஸ்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்

பி.டெக்., / எம்.டெக்., டியூயல் டிகிரி:
எரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
ஏரோபேஸ் இன்ஜினியரிங் – எம்.டெக்., இன் அப்ளைடு மெக்கானிக்ஸ்
பயொடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங் – எம்.டெக்., இன்பிராஸ்டரச்சுரல் சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் – எம்.டெக்., இன்பர்மேஷன் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் – எம்.டெக்., கம்யூனிகேஷன் மற்றும் சிக்னல் பிராசசிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் – எம்.டெக்., மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வி.எல்.ஐ.எஸ்., டிசைன்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் – எம்.டெக்., பவர் சிஸ்டம்ஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங் டிசைன் மற்றும் எம்.டெக்., ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – எம்.டெக்., எனர்ஜி டெக்னாலஜி
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – எம்.டெக்., இன்டெலிஜென்ட் மேனுபாக்சரிங்
மெக்கானிக்கல் புராடெக்ட் டிசைன்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் இன்ஜினியரிங் – எம்.டெக்., அப்ளைடு மெக்கானிக்ஸ்

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.1,750
செமஸ்டர் கட்டணம்: ரூ.16,650
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.2,000
மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.468
மொத்த கட்டணம்: ரூ.20,868

தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ்
சென்னை 600 036
பேக்ஸ்: 91 044 2257 0509
வெப்சைட்: www.iitm.ac.in

நீங்களும் கல்விக் கடன் பெறலாம்

உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.

உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.

சில கல்வி நிறுவனங்கள், ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்விக் கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.

கல்விக் கடன் பெறும் மாணவர், வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.

வட்டி விகிதம்
மாணவர்கள் பெறும் கல்விக் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் குறைந்த பட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகிதக் கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன.

கடன் ஜாமீன்
கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையைப் பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றிற்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.

கடனை திருப்பி அளித்தல்
கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன.  படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. அதுவும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.

ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ (ICWAI) வழங்கும் தொலைநிலைக் கல்வி

ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ICWA அடிப்படைப் படிப்பு

சேர்க்கைத் தகுதி

17 வயது பூர்த்தியடைய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்(போஸ்டல் கோச்சிங்)

போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.2000

விவரக் கையேடுக்கு ரூ.150(பதிவுக் கட்டணம் இல்லை)

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட டிடி(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

வங்கி வரைவோலை(DD)

சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ் நகல்

சான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்.

படிவத்தின் மீது 3 புகைப்படங்கள் சான்றளிக்கப்பட்டு, ஒட்டியிருக்க வேண்டும்.

சான்றை(attestation), any member of ICWAI /ICAI/ /ICSI/Parliament/Stage
Legislative Assembly or a Gazetted Officer or a Principal of a college ஆகியோரில், யாரேனும் ஒருவரிடம் பெறலாம்.

ICWA Intermediate படிப்பு

சேர்க்கைத் தகுதி

18 வயதுக்கு குறைந்தவராக இருக்கக்கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்(Postal Coaching)

போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3500

பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.300

விவரக் கையேடுக்கு ரூ.150

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட DD(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

வங்கி வரைவோலை

சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ்

சான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்

நீங்கள் பெற்ற பட்டத்தின் சான்றிளிக்கப்பட்ட நகல்

சான்றிளிக்கப்பட்ட 3 புகைப்படங்களை விண்ணப்பத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.

சான்றை any member of ICWAI /ICAI/ /ICSI/Parliament/Stage
Legislative Assembly or a Gazetted Officer or a Principal of a college ஆகிய யாரேனும் ஒருவரிடம் பெறலாம்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது, ஜுன் 18 முதல் 21 வரையிலும், டிசம்பர் 26 முதல் 29 வரையும் நடைபெறும்.

ஜுன் மாதத் தேர்வையெழுத, அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் 15க்குள்ளும், டிசம்பர் மாதத் தேர்வையெழுத அதே ஆண்டு ஜுன் 15க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை, தேவைப்படும் ஆவணங்களுடன் சேர்த்து, கட்டண ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட பிராந்திய கவுன்சிலுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

ICWA Final Course

தகுதி தேவைகள்

ஒரு செல்லத்தக்க பதிவு எண்ணைப் பெறும்வரை, ஒருவர், இறுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்.

ICWAI தேர்வை தடையின்றி எழுதியிருக்க வேணடும்.

ICWAI Intermediate Examination தேர்வை இறுதிப் பருவத்திற்கு முன்பாக தேறியிருக்க வேண்டும்.

டிசம்பர் தேர்வில் தேறிய மாணவர், அடுத்த ஜுன் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.

ஒரு மாணவர், தேவைப்படும் பயிற்சி முடிவு சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மாணவர், கட்டணத்தை, தற்போதைய மதிப்பில், குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். (ஜுன் தேர்வுக் கட்டணத்தை ஏப்ரல் 15க்குள்ளும், டிசம்பர் தேர்வுக் கட்டணத்தை அக்டோபர் 25க்குள்ளும் செலுத்திவிட வேண்டும்.

தலைமை அலுவலகங்கள், பிராந்திய கவுன்சில்கள் ஆகியவற்றில் ரூ.20 மற்றும் தபால் மூலமாக ரூ.25க்கு கிடைக்கும் விண்ணப்பத்தை, முறைப்படி சமர்ப்பித்திருக்க வேண்டும்.

Foundation, Intermediate மற்றும் Final தேர்வுகளில், ஹிந்தி மொழியில் எழுத, ஒருவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது.

Coaching Completion Certificate என்ற சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் கீழ்கண்ட பயிற்சிகளை அவசியம் முடித்திருக்க வேண்டும்.

5000 வார்த்தைகள் கொண்ட ஆய்வுக் கட்டுரை

நிலை 3 மற்றும் 4ல்(எது பின்பாகவோ) Coaching Completion Certificate பெற, ஆராய்ச்சிக் கட்டுரை அவசியம் தேவை. அதற்கான விதிமுறைகள் கீழ்கண்டவையாக இருக்க வேண்டும்.

இந்த ஆய்வுக் கட்டுரையானது, பல்கலைக்கழக பேராசிரியர், மத்திய மற்றும் மாநில அரசில் உதவி செயலர் என்ற நிலையிலுள்ள அதிகாரி, தனியார் துறை அல்லது பொதுத்துறையில் துணைத் தலைவர் என்ற நிலையிலுள்ள அதிகாரி மற்றும் FICWA, FCA, FCS என்ற நிலையிலுள்ளவர்கள் ஆகிய யாரேனும் ஒருவரது வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும்.

தனது ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு வழிகாட்டுநரை(Guide), ஒரு மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பிராந்திய கவுன்சில்கள் மற்றும் வாய்மொழி பயிற்சி மையங்கள் ஆகியவையும், இறுதிப் படிப்பிற்கு, வாய்வழி அல்லது தபால்வழி பயிற்சி வகுப்பை நடத்த அனுமதி பெற்றுள்ளன மற்றும் வேண்டுகோளின் பேரில் மாணவருக்கு, அறிமுகக் கடிதத்தையும் அளிக்கலாம்.

இதுபோன்ற ஆய்வுக்கு வழிகாட்டுநராக இருக்க தகுதிப் பெற்றவர்களின் பெயர் பட்டியலை பிராந்திய கவுன்சில் வைத்திருக்கும்.

மாணவரால் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையின் ஒரு நகல், பிராந்தியக் கவுன்சிலின் நூலகத்திலேயே, எதிர்காலத் தேவைக்கருதி வைக்கப்படும் மற்றும் அதன் பட்டியலானது, கொல்கத்தா தலைமை அலுவலகத்தில் Director of Studies at Headquarters -க்கு அனுப்பப்படும். ஆய்வுக் கட்டுரைக்கான சான்றிதழ் வழங்கப்படுகையில், அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை, பிராந்திய கவுன்சில் குறிப்பிடும்.

இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைக்கு, எந்தவிதமான கட்டணத்தையும் பிராந்தியக் கவுன்சில் வசூலிக்காது.

100 மணிநேர கணினிப் பயிற்சி

ஒரு நிலையில் தேறி அடுத்த நிலைக்கு சென்ற மாணவர் அல்லது இரண்டு நிலையிலும் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், கல்வி நிறுவனத்தால் அவ்வப்போது பரிந்துரை செய்யப்படும் கணினி நிறுவனத்தில், கட்டாய கணிப்பொறி பயிற்சியை முடித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பயிற்சிக்காக, ஒரு குறிப்பிட்டளவு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருந்தால், கணிப்பொறி பயிற்சியிலிருந்து ஒரு மாணவருக்கு விலக்கு அளிக்கப்படும்.

DOEACC -யின் A நிலை சான்றிதழ் பெற்றவர், இறுதி நிலைத் தேர்வுக்கு கணினிப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்குப் பெறலாம்.

சென்னை பல்கலை வளாகத்தில் இளநிலை பட்டப் படிப்பு

சென்னை பல்கலை, ஆஸ்திரேலிய பல்கலையுடன் இணைந்து, வளாக வகுப்புகளில் முதல் முறையாக இளநிலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்கிறது. இந்த படிப்புக்கு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

நாடு சுதந்திரம் அடையும் முன், 1857 ல் துவங்கப்பட்டது சென்னை பல்கலை. பின், பார்லிமென்ட் சட்டப்படி, சென்னை பல்கலையின் விதிகள் வகுக்கப்பட்டு, நாட்டின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த பல்கலையின் நேரடி வளாக கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகள் மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

 

இளநிலை படிப்புகளை பொறுத்தவரை, சென்னை பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், பல்கலையில் இணைப்பு பெற்ற அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் மட்டும் நடத்தப்படுகின்றன. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

 

இந்நிலையில், சென்னை பல்கலையின் வளாக வகுப்புகளில், முதல் முறையாக இளநிலை பட்டப் படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் கவுரி கூறியதாவது:

 

சென்னை பல்கலை வளாகங்களில் செயல்படும் பல்வேறு துறைகளில், முதுநிலை படிப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. தற்போது பல்கலையின் கிண்டி வளாகத்தில், பி.எஸ்சி., பிளெண்டட் படிப்பு வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.ஆஸ்திரேலியாவின் பிரபலமான மெல்போர்ன் பல்கலையுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, மெல்போர்ன் பல்கலையின் பாட திட்டப்படி, இந்த படிப்பு நடத்தப்பட உள்ளது.

Thanks to Dinamalar Website

 

இந்த படிப்பில், இயற்பியல், வேதியியல், கணிதம் முக்கிய பாடங்களாக இருக்கும். இந்த படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, மெல்போர்ன் பல்கலையில் இருந்து, பி.எஸ்சி., இணை பாடத்துக்கான சான்றிதழும் இணைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

சென்னை பல்கலையின் வளாகத்தில், வாழ்வியல் அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., படிப்பு, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, பாதியில் கைவிடப்பட்டது. அதில் சேர்ந்த மாணவர்கள் இணைப்பு கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு, படிப்பை முடித்தனர். இந்த முறை, அதுபோன்ற நிலை இல்லாமல், படிப்பை தொடர்ந்து நடத்தும் வகையில், ஆஸ்திரேலிய பல்கலையுடன், சென்னை பல்கலை ஒப்பந்தம் செய்து உள்ளது.

 

 

அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முதுநிலைப் பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ பெற்றவர்களும் விலக்கு பெறுவார்கள்.

மேற்கூறிய விதிவிலக்கைப் பெற விரும்பும் மாணவர்கள், இயக்குநருக்கு, ICWAI, 12, Sudder Street,Kolkata-700 016 என்ற முகவரிக்கு, தேவையான ஆணவங்களுடன், , ICWAI என்ற பெயருக்கு Payable at Kolkatta என்பதாக ரூ.1200க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.