ABOUT US

உதவும் நண்பர்கள் அறக்கட்டளை – அறிமுகம்

  • அரும்பாக்கம் பகுதி பள்ளிகள் / கல்லூரிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். தொடக்கம் 31.07.2020, செயல்பாடு 15.08.2020.
  • சமூகத்தில் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுசார் சேவையை தருவதே இதன் பிரதான நோக்கம்.
  • அரசியல் சார்பற்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு பொதுவான அமைப்பு.
  • சமூக அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இணைய முடியும் இணைப்பு கட்டணம் ரூபாய் 1000 (வருட சந்தா )
  • நன்கொடையாளர்களும் வரவேற்கப்படுகின்றனர்.

Helping Friends Charitable Trust – Introduction

  • Co-created by alumni of Arumbakkam area schools / colleges.
  • Registration 31.07.2020, Launch and Activity 15.08.2020
  • Its main purpose is to provide an intellectual service with awareness in the community.
  • Non-political is a common system in which people from all walks of life can work together
  • Anyone with a social concern can join as a member. Connection fee is Rs. 1000 (annual subscription)
  • Donors are also Invited

நமது சேவைகள்

கல்வி தொடர்பான முன்னெடுப்புகள்

  1. அனைத்து அரசு / தனியார் பள்ளி மாணவர்களும் அடிப்படை கல்வி பெறுவதற்கு துணைசெய்தல்.
  2. அரசின் திட்டங்கள் தகுதியுடைய அரசு / தனியார் பள்ளி மாணவர்களை அடைய உதவுதல்.
  3. தகுதியான மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல்.
  4. அரசு / தனியார் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிப்பது.
  5. விளையாட்டுகளில் தனியார் பங்களிப்புடன் மாணவர்களை தரமான வீரர்களாக உருவாக்குவது.
  6. தொழிற்கல்வி செயல்முறை வகுப்பு தேர்ந்தவர்களால் பள்ளிக்கே சென்று வகுப்பு எடுப்பது.

Our Services

Education related initiatives

  • Supporting all public / private school students to obtain basic education
  • Government programs help to reach eligible public / private school students
  • Payment of tuition fees to eligible students
  • Promoting the talents of public / private school students.
  • Making students quality players with private participation in sports
  • Vocational Process Going to school and taking classes by class selectors.

சமூகம் தொடர்பான அறிவுசார் சேவைகள்

  • மக்கள் சேவை மைய அலுவலகம் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு அரசின் இணைய வழி திட்டங்கள் இலவசமாக (விண்ணப்ப கட்டணம் மட்டும் பெற்று) ஞாயிறு நீங்கலாக அனைத்து நாட்களிலும் உதவி வருகிறோம். ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, கடவுச் சீட்டு (Passport) குடும்ப அட்டை, சாதி / வருமானம் / மாற்றுத்திறனாளி சான்றிதழ், தேசிய / மாநில திட்டங்கள், பள்ளி / கல்லூரி / அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தல், மேலும் பல சேவைகள்.
  • சிறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அரசின் இணைய வழி சேவைகள் தொழிலாளர்கள் விடுமுறை எடுக்காமல், தொழில் பாதிப்படையாத வண்ணமும் நேரடியாக தொழில் நிறுவனங்களுக்கு சென்று அவர்களுக்கான சேவைகளை இலவசமாக செய்யவிருக்கிறோம்.

Community related intellectual services

  • We are assisting the public directly through the Public Service Center Office with government web-based programs free of charge (with application fee only) all days except Sunday. Aadhar, Driving License, Voter Card, Passport Family Card, Caste / Income / Disability Certificate, National / State Programs, Applying for School / College / Government Jobs, and many more services
  • For those who work in small businesses, the government’s online services will allow workers to go directly to work and take care of their services free of charge, without taking vacations.

சமூகம் தொடர்பான பேரிடர் / மழைக்காலம் / அடிப்படை உதவிகள்

  • ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் முகாம் நடத்துதல். 2021 ஆம் வருடம் இரண்டு முகாம்கள் நடைபெற்றது. 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் மூன்றாவது முகாம் நடைபெற்றது.
  • கொரோனா பேரிடர் காலங்களில் அருமருந்தாக அறியப்பட்ட கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு தொடர்ந்து 44 நாட்கள் கொய்யா மற்றும் நெல்லிக்கனியுடன் வழங்கினோம்.
  • மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 2021 இல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வார இறுதி நாட்களில் பொதுமக்களுக்கும் / பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி பழம் இலவசமாக வழங்கியுள்ளோம்.
  • ஒரு வேளை உணவுக்கு கூட பிறரை எதிர்பாக்கும் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக உணவு மற்றும் குடிநீர் நன்கொடையாளர்களின் (பிறந்தநாள் / திருமணநாள் / உறவுகளின் நினைவுநாள்) சார்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கி வருகிறோம்.

Community related disaster / rainy season / basic relief

  • Conducting blood donation camp once in six months. In 2021 two camps were held.
  • We provided the public with guava and gooseberry for 44 consecutive days, drinking capsicum, which was known to be a panacea in times of corona disaster.
  • We have provided free drinking water and papaya fruit to the public / school children on weekends in November and December 2021 to prevent the spread of dengue fever during the rainy season.
  • We also provide free food and water on Sundays on behalf of donors (birthday / wedding / memorial) to people living on the side of the road who may even be facing food.

ஆசிரியர்கள் கெளரவிப்பு மற்றும் மாணவர்கள் ஊக்குவிப்பு

  • ஒவ்வொரு வருடமும் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளி ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பள்ளியிலேயே நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள். அந்த வகையில் 2020-21 ஆண்டுக்கான நிகழ்ச்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.
  • மக்கள் சேவை மையம் அலுவலகத்தில் நூலகம் அமைக்கப்பெற்று, அதை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றி உள்ளோம்
  • மாணவர்களுக்கு உயர் படிப்புக்கான வழிகாட்டு நிகழ்ச்சிகள், உடல்நலம் / மனநலம் சார்ந்த ஆலோசனைகள் சான்றோர்களால் பள்ளிக்களுக்கே சென்று வழங்கப்படும்.
  • பள்ளி / கல்லூரிகளில் பயின்ற எண்ணற்ற மாணவர்களை ஒருங்கிணைக்கவும் சமுதாய / கல்வி வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றவும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வருடம் ஒருமுறை அவரவர் பயின்ற பள்ளி / கல்லூரிகளில் நடைபெற உதவும் நண்பர்கள் அறக்கட்டளை துணைபுரியும்.

Teachers Honor and Students Encouragement

  • Each year the best teachers are selected from the government / government aided / private school teachers and they are honored at a ceremony held at the school. The program for the year 2020-21 will be held at Government High School, Corporation Primary, Intermediate and High Schools.
  • We have set up a library in the Public Service Center office and are going to make it accessible to government school students
  • Guidance programs for students for higher studies, health / mental health counseling will be provided by the certified schools.
  • The Friends Foundation supports alumni meetings once a year to help coordinate countless students in schools / colleges and work together for community / educational development.

சமூக வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு மற்றும் பொதுச் சேவைகள்

  • முகநூல் வழியாக (4500 நண்பர்கள்) முகநூல் பக்கம் (1000 நண்பர்கள்) நமது அறக்கட்டளை தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கிறோம். மேலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு தகவல்கள் பகிரப்படுகிறது
  • Youtube சேனல் (452 சந்தாதாரர்கள்) வழியாக அறக்கட்டளை தொடர்பான வீடியோக்கள், விழிப்புணர்வு மற்றும் நமது மக்கள் சேவை மையம் தொடர்பான சேவைகள் பொது மக்கள் தாங்களே வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள எளிமையான வழிமுறைகளுடன் வீடியோக்களை வெளியிட உள்ளோம்.
  • இணையதள முகவரி (hfct.in) மூலம் அறக்கட்டளை தொடர்பான தகவல்கள், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் விதமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொலைபேசி எண்கள் மற்றும் அத்தியாவசிய / அருகில் அமைந்துள்ள வீடுகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் பற்றிய விவரங்கள் தொலைபேசி எண்களோடு வழங்க உள்ளோம். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அன்றாட வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாலமாக இருக்க விரும்புகிறோம்.

Awareness and public services through the social website

  • Through Facebook (4500 friends) Facebook page (1000 friends) We immediately report information about our foundation. Also sharing awareness information needed by the community
  • Through the youtube channel (271 subscribers) we are releasing videos related to the Foundation, awareness and services related to our People Service Center with simple steps to make the general public feel at home.
  • Through the website address (hfct.in) we are going to provide information about the Foundation, telephone numbers of unorganized workers and telephone numbers of shops selling essential or essential household goods in order to provide basic amenities to the general public. We want to be strong for the public and everyday workers through this

Meet Our Team

G. DHANASEKAR

G. DHANASEKAR

CHAIRMAN

9884557811

S. ARUNKUMAR

S. ARUNKUMAR

VICE CHAIRMAN

9551094400

M. SIDDIQUE ALI

M. SIDDIQUE ALI

SECRATORY

9591994106

D. BABURAJ

D. BABURAJ

VICE SECRATORY

9789711197

J. PEER MOHAMED

J. PEER MOHAMED

TREASURER

6382745273